தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்த். இவர் அவ்வப்போது இணையத்தில் பல சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியுள்ளார்.இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் சித்தார்த் இருவரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் சில காரணங்களால் இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கடந்து சில நாட்களாக நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதீ ராவ் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்து ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைத் தொடர்ந்து இருவரின் காதல் உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.