தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதங்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தினாலும் அந்த குழந்தையை பராமரிக்க 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.அது மட்டுமல்லாமல் பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுணர்களுக்கு 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது.270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்க தேவையான சிறப்பு துணைவிதி திருத்தம் மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலை கடைகளில் ஆறு மாதம் மட்டுமே மகப்பேறு விடுப்பு தருவதாக இருந்த புகாரில் தமிழக அரசே இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.