டெல்லியில் காதலைக் கண்டித்ததால் பெண் காவலரை சொந்த மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்குநாள் காதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் சிறு வயதிலேயே காதல் பூக்கின்றது. ஆம், காதலில் விழுந்த பலர் காதலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். சிலர் வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டால், தோல்வியில் இருவரும் தற்கொலை செய்து கொள்வதும், வீட்டை விட்டு ஓடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் நாம் ஏன் சாக வேண்டும் என்று காதல் முற்றி பெற்றோர்களையே கொல்லும் அளவிற்கும், ஏன் கொலையும் செய்துள்ளனர்.
அந்த வகையில் டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், டெல்லியில் போலீசில் தலைமை காவலராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகின்றார். இந்த பெண் காவலருக்கு 10-ஆம் வகுப்பு படித்து வரும் மகள் இருக்கிறார். இவரது மகளும், அவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜித்தேந்திர குமார் (19) என்ற இளைஞரும் நீண்ட நாளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காதலர் தினத்தன்று (நேற்று முன்தினம்) காதலன் ஜித்தேந்திரா வீட்டுக்கு வர, காதல் விவகாரம் பெண் போலீசுக்கு தெரிந்து விட்டது. இதனால் பெண் காவலர் மகளை அடித்து இப்படி செய்யாதே என்று கண்டித்துள்ளார். இதையடுத்து காதலுக்கு தடையாக இருக்கும் அம்மாவை (பெண் போலீஸ்) காதலனுடன் சேர்ந்து கொலை செய்வதற்கு மகள் திட்டமிட்டுள்ளார். சமயம் பார்த்து அம்மாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.
இதில் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறியுள்ளார் தாய். பின்னர் இருவரும் சேர்ந்து ஈவு இரக்கமின்றி கிரைண்டர் கல்லால் ஓங்கி முகத்தில் அடித்தும், கழுத்தை கயிற்றால் இறுக்கியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெண் காவலரின் கணவர் போலீசில் புகாரின் அளித்ததன் பேரில் மகளையும், காதலன் ஜித்தேந்திராவையும் போலீசார் கைது செய்தனர். காதலுக்காக அம்மாவையே மகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.