தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பங்கஜம் ஹவுஸ் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவர் மஞ்சள் தூள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார்.
நேற்று அவரின் வீட்டிற்கு வேலை பார்க்கும் தொழிலாளி உமா என்பவர் வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. . பின் தகவல் அறிந்து வந்த ராஜாராம் வீட்டிற்கு சென்று உள்ளே பார்த்தபொழுது பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் பின் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.