திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு சுற்றுப்புறத் தூய்மை விழிப்புணர்வு செல்பி பாதகையை அம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி திறந்து வைத்து உறுதிமொழி ஏற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக நம்ம ஊரு சூப்பருவிழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் பொதுமக்கள் மத்தியில் சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செல்பி பாதகை அமைக்கப்பட்டது.
அதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் என்று திறந்து வைத்தார். மேலும் சுற்றுப்புறத் தூய்மை மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் தொடர்பான உறுதி மொழியை அவர் ஏற்றார்.இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மன்னார்குடி பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையின் சார்பாக 86 லட்சத்து 60 ஆயிரம் வங்கி பெருங்கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்