Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் 5 நாட்களுக்கு….. நல்ல மழை இருக்கு….. மக்களே ஜாக்கிரதை….!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |