நாகப்பட்டினம் மாவட்டம் அம்பல் காலனியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சுபஸ்ரீ. இவர்களின் 10 மாத கைக்குழந்தை சர்வேஸ்.. இந்நிலையில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் தம்பதியினர் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வழுவூர் அருகில் பண்டாரவடை என்னும் இடத்தில் அவருடைய இருசக்கர வாகனம் பழுதாகி நிலை தடுமாறி மனைவி மற்றும் கைக்குழுந்தையுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவரது மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது குத்தாலம் தாலுகாவில் ஆய்வு பணிக்காக அந்த வழியை சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா சாலை விபத்தில் காயமடைந்த தம்பதியினரை பார்த்து உடனடியாக மாவட்ட ஆட்சியரின் காரில் வினோத் மற்றும் அவரது குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு மருத்துவர்கள் காயமடைந்த தம்பதியினறுக்கு சிகிச்சை அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருக்காமல் மாவட்ட ஆட்சியர் வாகனத்தின் மூலம் காயமடைந்த குடும்பத்தை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.