தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றன.
தக்காளி 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தக்காளியின் விலை கடுமையாக உயர தொடங்கியுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் சில நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த தக்காளி தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. தக்காளி சமையலுக்கு மிகவும் முக்கியம் .தக்காளி இல்லாமல் எந்த குழம்பும் வைக்க முடியாது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அவுதி அடைந்துள்ளன. மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகின்றது.
திருவாரூர் மாவட்டத்திற்கு பெரும்பாலும் திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. தற்போது தக்காளி விளையக்கூடிய மாவட்டங்களில் பெரும்பாலும் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கொடுக்கிறது. ஆனால் அது போன்ற கடைகள் திருவாரூர் மாவட்டத்தில் இல்லை என்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தக்காளி மட்டும் இல்லாமல் காய்கறி விளையும் சரமாரியாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.