இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட ஒரு நபர் வளைவு ஒன்றில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்து விபத்தில் சிக்கியதோடு, நொடியில் தீப்பற்றியும் எரிந்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் வாகனங்கள் அளவுக்கு அதிகமாக பெருகி இருக்கிறது. அதிவேகமாக வாகனத்தை ஓட்டாமல் கவனமாக செல்லவேண்டும் என எத்தனை விழிப்புணர்வு கொடுத்து வந்தாலும் அதையெல்லாம் மக்கள் அவ்வளவாக காதில் வாங்கிக்கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக வாகன ஓட்டிகள் வளைவுகளில் வளையும்போது வேகமாக செல்லக்கூடாது என கூறினாலும் பலர் அதனை கண்டு கொள்ளாமல் வேகமாகவே செல்கின்றனர். இந்நிலையில் வேகமாக வளைவில் திரும்பிய ஒரு நபர் நொடிப்பொழுதில் விபத்தில் சிக்கியதோடு, வாகனமும், குறித்த நபரும் தீப்பற்றி எரிந்துள்ளனர். அதன்பின் சாதூர்யமாக அந்த நபர் செய்த காரியத்தால் உயிர்பிழைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..
The quick thinking and preparedness of the people in the grey car. pic.twitter.com/pAcseOd2KI
— Startup Steve 👋 (@caffeinatedai) September 7, 2022