வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: “திருமண விழா என்று விளம்பரப்படுத்தாமல் மண்டல மாநாடு என்ன கூறியிருக்கலாம். மகனின் திருமணம் மூலம் கட்சி எழுச்சி பெற வேண்டும் என்று இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண விழாவிற்கு குறிப்பு எடுத்துச் செல்வது இல்லை. அமைச்சர் மூர்த்தியை பற்றி பேச வேண்டி இருப்பதால் இந்த விழாவிற்கு குறிப்பு எடுத்து வந்துள்ளேன்.
பல விஷயங்களை பேசிய முதல்வர் இரண்டாக பிளவுப்பட்டு நிற்கும் அதிமுகவில் தற்காலிக பதவியில் இருக்கும் ஈபிஎஸ் திமுகவை விமர்சிக்க தேவையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் திமுக எம்எல்ஏக்கள் தன்னுடன் பேசுவதாக கூறுகிறார் இபிஎஸ். ஆனால் அதிமுக எம்எல்ஏக்களே அவரிடம் பேசுவதில்லை என்று விமர்சித்தார். நான் AM., PM என நேரம் பார்த்து உழைப்பதில்லை நான் M M பார்த்து உழைக்கிறேன் என்று தெரிவித்தார். பொய் பிரச்சாரத்தை பற்றி கவலை வேண்டாம். அதனைப் பற்றி பேச நேரமில்லை. மக்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்” என்று தெரிவித்தார்.