Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…… 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல சென்னையிலும் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சின்னகல்லாரில் 7,  வால்பாறையில் 6 சென்டிமீட்டர் மழை பதிவானது.

Categories

Tech |