தமிழ் திரையுலகில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரிசெல்வராஜ். தன் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காஇடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதன் வாயிலாக முன்னணி இயக்குனராக வளர்ந்த மாரிசெல்வராஜ், இப்போது உதய நிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் திரைப்படத்தை இயக்குகிறார். இவற்றில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். “மாமன்னன்” படப் பிடிப்பு துவங்கி முழுவீ ச்சில் நடந்து வந்தது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ், மாமன்னன்படக் குழுவினருடன் ஓணம் பண்டிகையை நேற்று (08-09-2022) கொண்டாடி இருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தன் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.