இணையதள தொகுப்பாளரான விக்னேஷ் காந்த் சின்னத்திரை தொகுப்பாளராகிய பிறகு நகைச்சுவை நடிகராக சினிமா துறையில் அறிமுகமானார். இவர் சென்னை 28, நட்பே துணை, மீசைய முறுக்கு, மெஹந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, தேவ், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
அதனை தொடர்ந்து விக்னேஷ் காந்துக்கும் என்ஜினியரிங் பட்டதாரியான ராசாத்தி என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன், ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் நடிகர் விக்னேஷ் காந்த் வெளியிட்டுள்ளார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.