Honda நிறுவனத்தின் புது மோட்டார் சைக்கிள் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. தற்போது புதிய Honda டிரான்சால்ப் 800 மாடல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இத்தாலியில் நடைபெற இருக்கும் EICMA 2022 நிகழ்வில் புதிய Honda டிரான்சால்ப் 800 மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் red, white மற்றும் blue போன்ற நிறங்களில் காட்சியளிக்கிறது. புகைப்படத்தில் டாப் எண்ட் மாடலாகவே இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஒட்டுமொத்த ஸ்டைலிங் ஆப்ரிக்கா ட்வின் மாடல்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 21 இன்ச் அளவில் ஸ்போக் வீல் வழங்கப்பட்டுள்ள இந்த மோட்டார்சை்க்கிள் ஆப் ரோடிங் திறன்களையும் பெற்றிருக்கும் என தெரிகிறது. புதிய Honda transalp 800 மாடலில் வழங்கப்பட்டுள்ள 800சிசி பேரலெல் ட்வின் என்ஜின் மூலம் Honda நிறுவனம் யமஹா டெனெர் 700 மாடலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த பைக் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். இந்நிலையில் புதிய Honda transalp மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது விலை ரூ. 12 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மோட்டார்சைக்கிளின் டிசிடி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.