தமிழகத்தில் பால் வினியோகம் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு 24 மணி நேரமும் கைப்பேசி வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மழைக்காலம் மற்றும் பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடை இன்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் பால் விற்பனை மற்றும் பாலகங்கள் ஆகியவற்றிற்கு அதிகாரிகள் அடிக்கடி சென்று ஆய்வு செய்து குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பால் விநியோகம் உள்ளிட்ட கூடுதல் தகவலை பெறுவதற்கு 18004253300 என்ற கைபேசி எண்ணை 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.