சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் புவனேஸ்வர் குமார்.
ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. விராட் கோலி 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 122* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.. மேலும் கேப்டன் கே.எல் ராகுல் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்..
இதையடுத்து 213 ரன்களை நோக்கி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர்.. இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் புவனேஸ்வர் குமார் விசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதனை தொடர்ந்து மீண்டும் புவனேஸ்வர் குமார் வீசிய 3ஆவது ஓவரில் கரீம் ஜனத் 2, நஜிபுல்லா ஸத்ரான் 0 ரன்களில் இருவரும் ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் 3 ஓவரில் 9/4 மட்டுமே எடுத்து தத்தளித்தது.. அதன் பின் அர்ஷ்தீப் சிங் வீசிய 6ஆவது ஓவரில் முகமது நபியும் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின் மீண்டும் புவனேஸ்வர் குமாரின் அடுத்த ஓவரில் அஸ்மத்துல்லா உமர்சாய் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின் வந்த ரஷீத் கான் 15, முஜீப் உர் ரகுமான் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் இப்ராகிம் சத்ரான் மட்டும் முடிந்தவரை ஆடி 64 (59) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.. பரீத் அகமது 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் 1 எக்கனாமியில் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.. புவனேஸ்வர் குமார் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் புவனேஸ்வர் குமார்..
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள் :
புவனேஸ்வர் குமார் – 84
யூசுவேந்திர சஹால் -83
ஜஸ்பிரிட் பும்ரா – 69
ரிசல்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் -66
ஹர்திக் பாண்டியா – 54
#BhuvneshwarKumar becomes the highest wicket taker for #TeamIndia in T20Is 🙌#AsiaCup2022 | #INDvAFG | #AsiaCupT20 pic.twitter.com/CZWgicZgsN
— Doordarshan Sports (@ddsportschannel) September 8, 2022