உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார், அவருக்கு வயது 96.
இன்று மதியம் முதலே பிரிட்டிஷ் மகாராணியின் உடல்நலம் குறைவு ஏற்பட்டதனால அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் எனவும் தகவல் வந்த வண்ணம் இருந்தது. ஆகவே அவருடைய வாரிசுகள் அனைவரும் சென்று ராணியை அவர் சிகிச்சை பெற்று இருக்கும் இடத்திலேயே சந்தித்தார்கள்.
அவர் உடல் நலம் மிகவும் விரைவாகவே கவலைக்கிடமானதற்கு காரணம் என்னவென்றால் அவருக்கு 96 வயதாகிறது. இத்தகைய வயதிலேயே அவருக்கு உடல் நலக்குறைவு என்ற உடனேயே பிரிட்டன் நாட்டிலே அனைவருக்கும் கவலை ஏற்பட்டது.ஆகவேதான் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலே அவர் இருந்தார். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் உள்ளிட்ட அனைவரும் அவரை சென்று சந்தித்த நிலையிலே தற்போது அவர் உயிரிழந்துள்ளார் என்கின்ற தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
ஆகவே பிரிட்டன் மக்களை பொறுத்தவரை மிகவும் துக்ககரமான செய்தி. அந்த நாட்டிலேயே பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை நடத்தி வந்தாலும், ராணி என்பவர் தான் எல்லாருக்கும் மேலாக, அரச குடும்ப தலைவராக இருந்து வந்தார். அதுவும் மிகவும் நீண்ட காலமாக ராணியாக இருந்தவர் குயின் 2ஆம் எலிசபெத் மட்டுமே. அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே 96 வயதிலேயே அவர் உயிர் இழந்திருக்கின்றார். என்கின்ற துக்ககரமான செய்தி வந்துள்ளது. இதனால் பிரிட்டன் நாடு முழுவதுமே தற்போது சோகத்தில் ஆழ்ந்து துக்கத்தை அனுசரித்துக் கொண்டிருக்கின்றது