ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்த கோலி பல சாதனைகள் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக ஆடி பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. மேலும் கே.எல் ராகுல் 62 ரன்கள் எடுத்திருந்தார்.. பின் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகவே ரன் குவிக்க தடுமாறி வந்தார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார் கோலி. இரண்டு ஆட்டங்களில் அரைசதம் கடந்த விராட் கோலி நேற்று கடைசி லீக் போட்டியில் சதம் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்..
விராட் கோலி கடைசியாக 2019 ஆம் ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் தான் சதம் அடித்து இருந்தார்.. தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 122* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இது முதல் சதமாகும். ஒட்டுமொத்தமாக இது 71 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார் கோலி..
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் கிங் கோலி திடீரென ஃபார்முக்கு திரும்பியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.. 1020 நாட்கள் & 83 இன்னிங்ஸ்க்கு பிறகு முதல் சதம் பதிவு செய்த விராட் கோலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியின் மூலம் விராட் கோலி படைத்த சாதனைகள் :
250 சர்வதேச சிக்ஸர்களை அடித்த 5ஆவது இந்தியர் என்ற பெருமைக்குரியவர்..
ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் (122*).
டெஸ்ட், ஒரு நாள், டி20 என 3 வகை கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 4ஆவது இந்தியர்.
அதிக சர்வதேச சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் (71).
3,500 சர்வதேச டி20 ரன்கள் குவித்த இரண்டாவது வீரர்.
24 ,000 சர்வதேச ரன்களை குவித்த 7ஆவது வீரர்.
#GOAT𓃵 #ViratKohli𓃵 https://t.co/qOxNT0Mu06
— Lohith Yadav (@LohithY85948655) September 8, 2022