Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நூதன முறையில் 2 பேரிடம் மோசடி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. பொதுமக்களுக்கு அறிவுரை…!!

ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை தொட்டவுடன் வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவிடுமாறு கேட்கப்பட்டது. அப்போது அந்த இளம்பெண் அறியாமல் வங்கி கணக்கு தகவல்களை பதிவிட்டார். உடனடியாக வங்கியில் இருந்து 77 ஆயிரத்து 950 பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தொழில் செய்வதற்காக கடன் பெற முயற்சி செய்தார். அப்போது சதீஷின் செல்போனுக்கு வந்த ஒரு எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் 10 லட்ச ரூபாய் வரை கடன் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கு சேவை கட்டணமாக 1 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியதால் சதீஷ் அந்த பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் கடன் கொடுக்கவில்லை. இதுகுறித்து சதீஷ் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகார்களின் பெரும் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணிடமிருந்து மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் அந்த வங்கி கணக்கு எண்ணை முடக்கி பணத்தை மீட்டனர். பின்னர் சதீஷ் இழந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மீட்டு அவரிடம் கொடுத்துவிட்டனர். இதனை அடுத்து செல்போனில் வரும் தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாறக்கூடாது என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |