அமெரிக்காவில் சிறுமிக்கு நடைபெற்ற கொடுமைக்காக 38 வயதான நபர் ஒருவருக்கு 9 வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. Phillip lyvonne stephens(38) என்ற கொடூரனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. 10 வயதான சிறுமியிடம் பலமுறை தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டிருக்கிறது. அவரது இந்த செயல் கடந்து 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Phillip செய்த குற்றத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். ஏனென்றால் இது பற்றி தெரிந்ததும் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கின்றார். இது எல்லாம் வீடியோ ஆதாரங்களை மூலமாக தெரிய வந்திருக்கிறது. அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாய்க்கு 20 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல குற்றவாளியான நபருக்கு 9 வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை சிறையில் இருந்து அழைத்து ஆதாரங்களை அழிக்குமாறு Phillip கேட்டுக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
Categories
பிரபல நாட்டில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… வீடியோ ஆதாரத்தால் வசமாக சிக்கிய குற்றவாளி… 9 வருடம் ஆயுள் தண்டனை…!!!!!!
