தர்மபுரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இந்த கூட்டம் முடிந்த பிறகு பிறகு தர்மபுரியில் உள்ள மூன்று பள்ளிகளை திடீராய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது மாணவ, மாணவிகளிடம் அவர்களுடைய கல்வி குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பள்ளி கட்டிடம் மற்றும் கழிவறைகளை குறித்து ஆய்வு செய்தார். அதன் பிறகு தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆய்வு மேற்கொண்ட போது 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியின் தமிழ் ஆசிரியை பார்வையற்ற திறனாளி தமிழ்ச்செல்வி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவிகளோடு அமர்ந்த ஆசிரியை நடத்திய பாடத்தை கவனித்தார்.
அந்த ஆசிரியர் தோழர்களே என கவிதை தொகுப்பு குறித்த பாடத்தை அவர் நடத்தினார். இதனை தொடர்ந்து அமைச்சர் மகேஸ் திரைப்பட பாடல் ஆசிரியர் வைரமுத்துக்கு தனது செல்போனில் தொடர்பு கொண்டு வைரமுத்துவிடும் பார்வையற்ற தமிழ்ச்செல்வி ஆசிரியர் பாடம் நடத்திய விதம் குறித்து தெரிவித்தார். அதன் பிறகு வைரமுத்து தமிழ் ஆசிரியை தமிழ்செல்வியை பேச வைத்தார். அப்போது பேசிய வைரமுத்து, தமிழ் ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்தார். இரண்டு கண்கள் இல்லை என்றாலும் ,20 நக கண்களும் நமக்குள்ளது என நம்பிக்கை வையுங்கள். உங்களின் தமிழ் சேவை மேலும் தொடரட்டும் எனக் கூறி ஆசிரியருக்கு தன்னம்பிக்கை ஊட்டினார. மேலும் தருமபுரி வந்தால் தங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தார்.