Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு: மகளிர் இட ஒதுக்கீடு வழக்கு….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்பிரிவினில் 30% இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70% இடங்களிலும் பெண்கள் போட்டியிடும் வகையில் இடங்கள சட்டப்பிரிவுகளை எதிர்த்தும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய நடைமுறை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் முதலில் பெண்களுக்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30% பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன் பிறகு சமுதாய ரீதியிலான இட ஒதுக்கீடை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசு பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது துரதிஷ்டவசமானது.

இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. இதே நடைமுறைப்படி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதே நேரத்தில் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமை மறுக்க முடியாது. எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி முதலில் பொது பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நிரம்பி விட்டு, அதில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டும் அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழங்குகளை முடித்து வைத்தனர்.

Categories

Tech |