ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிஷ்ணா என்ற பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் யோகேஷ் குப்தா என்ற கலைஞர் பார்வதி வேடமிட்டு நடித்துள்ளார். அப்போது மேடையில் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.ஊருக்காக ஆடும் கலைஞர் தன்னை மறப்பான் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அவர் கீழே விழுந்து சரியும் வரை நடனமாடிக் கொண்டிருந்தார்.
அவருடன் சிவன் வேடம் அணிந்து நடனமாடிக் கொண்டிருந்த மற்றொரு கலைஞர் விரைந்து வந்து பார்வையாளர்களை அழைத்த போது அனைவரும் இது ஒரு நடனத்தின் ஒரு பகுதி என நினைத்து யாரும் மேடைக்கு வரவில்லை. அதன் பிறகு சக கலைஞர்கள் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். நடனம் ஆடிக் கொண்டிருக்கும்போதே மேடையில் நடனக்கடனார் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.