Categories
உலக செய்திகள்

லிஸ் ட்ரஸ் தலைமையில் அமைந்த மந்திரி சபை…. ரிஷி சுனக் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடம் இல்லை…!!!

இங்கிலாந்து நாட்டில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் ரிஷி சுனக்கிற்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை.

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியினரால் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், லிஸ் ட்ரஸ் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

புதிய பிரதமரான அவர் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் ஆசீர்வாதம் பெற்றார். அதன் பிறகு, அவர் தலைமையிலான மந்திரி சபை கூட்டமானது இன்று தொடங்கியிருக்கிறது. மந்திரி  சபையில் பன்முக கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தன்மையுடைய சிறுபான்மையினரை முக்கிய பதவிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

எனினும், லிஸ் ட்ரஸ்-உடன் பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருந்த, முன்னாள் நிதி மந்திரியான ரிஷி சுனக் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த நபர்களுக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்படவில்லை.

Categories

Tech |