நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. நேற்று நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் திருமுல்லைவாயிலை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில் அடுத்த சோழபுரம் இந்திரா நகரில் வசிப்பவர் அமுதா. இவர் ஆவடி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் லக்ஷ்னா ஸ்வேதா. கடந்த 2020 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடித்திருந்தார். இவருக்கு டாக்டர் படிக்க ஆசை அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார். ஆனால் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு கடுமையாக படித்து தேர்வு எழுத இந்த முறையும் தோல்வியடைந்தார். எப்படியும் தேர்ச்சி பெற்று விடுவோம் என்று நம்பிக்கையில் இருந்து அவருக்கு இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மூன்றாவது முறையாக நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் லக்ஷ்னா ஸ்வேதா மிகவும் மனமடைந்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் லக்ஷனாவுக்கு ஆறுதல் தெரிவித்தார். அடுத்த நீட் தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூற அவர் சமாதானம் ஆகவில்லை.
மிகுந்த மனவேதனையில் இருந்த அவர் நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கச் சென்றுள்ளனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் மாணவி லக்ஷ்னா திடீரென அறையில் உள்ள மின்விசிறியின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் அமுதா எழுந்து பார்க்கும் போது மகாலட்சுமி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மாணவி லஷ்ணா ஸ்வேதா, ஆசிரியை அமுதாவுக்கு ஒரே மகள் ஆவார். அமுதா கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். மகளின் தற்கொலையால் அவரை டாக்டராக்கும் நம்பிக்கையில் இருந்த அமுதா நிலை குலைந்து போயுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.