தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு தர்மபுரி எம்பி டிஎன்பிஎஸ் செந்தில்குமார் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜிகே மணி, எஸ்பி வெங்கடேஸ்வரன், சதாசிவம் போன்றோர் தலைமை தாங்கியுள்ளனர். இதில் மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது பள்ளிக்கல்வித்துறை சார்பில் தர்மபுரியில் நடைபெற்ற ஆய்வு கூடத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் போன்ற 4 மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் அரசு பள்ளிகள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இருப்பது தெரியவந்துள்ளது.
புதுமைப்பெண் நிதி உதவி திட்டம் இந்த இடைநிற்றலை தடுக்கின்றது. பல்வேறு இடங்களில் சிதலமடைந்துள்ள வகுப்பறை கட்டிடங்கள் அகற்றப்பட்டு அங்கு தேவைக்கேற்ப புதிய கட்டடங்கள் கட்டுவது பற்றிய பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கழிப்பறை கட்டிடங்கள் இல்லாத பள்ளிகளில் தனியார் சமூக பொறுப்பு நிதி மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த நான்கு வருடங்களுக்குள் பள்ளிகளில் கழிப்பறைகள் வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூபாய் 7000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நீட் தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் அணுக வேண்டும்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் நந்தகுமார் பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அறிவொளி லதா தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் போன்ற கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தர்மபுரி மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு பின் தர்மபுரி சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.