ஆசியக்கோப்பையில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் சூப்பர் 4ல் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்திய அணியில் பேட்டிங் ஓரளவு சூப்பராக இருந்த போதிலும், பௌலிங் மற்றும் பீல்டிங் சரியாக இல்லாதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.. அதே சமயம் சூப்பர் 4ல் தோல்வி அடைந்த இரண்டு போட்டியிலும் மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம்..
இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு துபாய் மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர் கொள்ள இருக்கிறது. ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், சம்பிரதாய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என இந்திய அணி முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இதிலும் தோற்றால் இந்திய அணி ரசிகர்கள் மேலும் கோபத்தின் உச்சிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால் இதில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பது தான் உண்மை.. அதேசமயம் இந்த தொடரில் சிறப்பாக ஆடி வரும் ஆப்கானிஸ்தான் அணி நேற்று கூட பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4ல் கடைசி வரை போராடியது..
இருப்பினும் அந்த அணியை 1 விக்கெட் சித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.. முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்பின்னர் ரஷீத் கான் மற்றும் முஜீப் ரகுமான் ஆகியோர் இந்திய அணிக்கு சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.. இந்த இரு அணிகளும் இதுவரையில் டி20 கிரிக்கெட்டில் 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கிறது. இதில் மூன்று ஆட்டத்திலும் இந்தியாவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.