இந்தியாவின் நம்பர்-1 தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகைகளை வழங்கி இருக்கிறது. ஜியோ நிறுவனமானது 6 வருடங்கள் நிறைவடைந்த சூழ்நிலையில் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.10 லட்சம் வரை வெகுமதியை வெல்லமுடியும். இதற்கென வாடிக்கையாளர்கள் தங்களது ரிலையன்ஸ் ஜியோதொலைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதும். இதுகுறித்த முழு விபரத்தையும் அறிந்துக்கொள்ளுவோம்.
இச்சலுகையானது செப்டம்பர் 6ம் தேதி துவங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை இருக்கும். இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரீபெய்ட் எண்ணை ரூபாய்.299 (அல்லது) அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யவேண்டும். இந்த ரீசார்ஜ் சலுகைகாலத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். இந்த சலுகை தமிழ்நாடு வட்டத்திற்குபொருந்தாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் இச்லுகை எங்கெல்லாம் செல்லுபடியாகாது என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை. அதன்படி இந்தச் சலுகை தமிழ்நாடு தவிர நாட்டின் மற்ற பகுதிகளில் செல்லுபடி ஆகும் என்று கருதலாம்.
இது தொடர்பான தகவலை ஜியோ டுவிட் வாயிலாக தெரிவித்து இருக்கிறது. இதுபற்றிய மற்ற விபரங்கள் தற்போது நிறுவனத்தால் பகிரப்படவில்லை. ஜியோநிறுவனம் 4ஜி சேவையை இந்தியாவில் 5 செப்டம்பர் 2016 அன்று அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 6 வருடங்கள் நிறைவடைந்து உள்ளதால்,வாடிக்கையாளர்களுக்கு சலுகையும் அறிவித்துள்ளது.
இந்த சலுகை காலத்தில் ரீசார்ஜ்செய்யும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்திடம் இருந்து சில பரிசுகளைப் பெறலாம். ஆகவே உங்களிடம் ரிலையன்ஸ் ஜியோதொலைபேசி எண் இருப்பின், நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சலுகையானது இப்போது ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை செல்லுபடியாகுமா? இல்லையா? என்பது குறித்த தகவல் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை.