பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றார்கள். இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உள்ள பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில் இலங்கையும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்திருக்கிறது. மேலும் பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி நிவாரண முகாம்களை தங்கி இருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக தேயிலையை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதர் உமர் பரூக் பர்கியிடம் இலங்கை வெளியுறவு மந்திரி சப்ரி இந்த தேயிலையை ஒப்படைத்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்தாலும் இலங்கையின் இந்த மனிதாபிமான நடவடிக்கை சர்வதேச நாடுகளில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Categories
இந்த மக்களுக்கு இவ்வளவு நல்ல மனசா…? பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய இலங்கை… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!
