அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கு தொடர்பான அனைவருக்கும் புதிய சிக்கல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை தொடர்ந்து நடத்தவும் உயர் நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.