இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, டிஜிபியிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றார். இன்றைய தினத்தில் தான் புகார் மனு சிபிசிஐடி காவல்துறை அதிகாரிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. டிஜிபியிடம் ஈமெயில் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில், அதிமுக தலைமைக் கழகத்தில் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு நடைபெற்ற நாளான்று கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தையடுத்து அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தை நாடி 21ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக அலுவலக சீல் அகற்றப்பட்டு அலுவலகம் திறக்கப்பட்டது. மேலும் ஒரு மாத காலம் தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் காவல்துறையில் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக புகார் கொடுத்திருந்தார். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை சொல்லி நீதிமன்றம், கடுமையான அதிருப்தி தெரிவித்தது, பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை சிவி.சண்முகம், அதிமுக அலுவலகத்தில் தொடங்கியிருக்கும்போது இங்கே, எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம் ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது என்று புகழேந்தி புகார் கொடுத்து இருக்கின்றார். இதன் மீது காவல்துறை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என இனி தான் தெரிய வரும்.