Categories
மாநில செய்திகள்

72 நாட்களுக்குப் பிறகு….. EPS செய்யப்போகும் தரமான சம்பவம்….. இன்று அதிமுக அலுவலகத்தில்….!!!!

72 நாட்களுக்கு பிறகு இன்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் செல்கிறார்.

அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக வெடிக்க அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட் உத்தரவின் பெயரில் அந்த சீல் அகற்றப்பட்டு அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிச்சாமி இடம் ஒப்படைக்கப்பட்டது.

சாவி ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து தலைமை அலுவலகத்திற்கு அவர் வரவில்லை. இந்நிலையில் இன்று கட்சி அலுவலகத்திற்கு வருகை தருகிறார். காலை 10 மணிக்கு கட்சி அலுவலகம் வரும் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக தலைமை கழகம் பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |