கேரளாவில் உள்ள ஒரு குழுவினர் பெண்களின் மாதவிடாய் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, சிமுலேட்டர் இயந்திரம் மூலம் ஆண்களுக்கு இயற்கைக்கு மாறான மாதவிடாய் வலியை ஏற்படுத்துகின்றனர். பெரும்பாலான ஆண்களால் அந்த வலியை தாங்க முடியவில்லை. ஆனால் பெண்கள் அந்த வலியை தாங்கிக் கொள்கின்றனர். மாதவிடாய் வலியால் அவதிப்படும் ஆண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து நெட்டிசன்கள் பெண்கள் உண்மையாகவே கிரேட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த கருவியை பயன்படுத்திய ஒரு சிலர் கூறுகையில், இது வலியில்லை இது மிகவும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்த வேதனையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல மற்றொருவர் ஒரு மனிதனாக நான் என்னுடைய வாழ்க்கையில் மாதவிடாய் வலியையும் அனுபவித்ததில்லை. இது எனக்கு மிகவும் வேதனையாகவும், அனுபவமாகவும் இருந்தது. பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அவல நிலையை குறித்து நான் நிறைய தெரிந்து கொண்டேன். இந்த அனுபவத்திற்கு பிறகு நான் சென்று மாதவிடாய் வலியை பற்றி படித்தேன். சுமார் 84 சதவீதம் பெண்கள் இயற்கையாகவே அந்த வலி அனுபவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.