Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வங்கியிலிருந்து பணம் எடுப்பவர்களை குறி வைத்து கொள்ளை”…. கணவன்-மனைவி உள்பட மூன்று பேர் கைது….!!!!!

வங்கியில் இருந்து பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து, அவர்களிடம் இருந்து 4 1/2 லட்சத்தை மர்ம நபர்கள் சென்ற 5 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். போலீசாரின் விசாரணையில் கார்த்திக், அவரின் மனைவி காயத்ரி, தந்தை கணேசன் உள்ளிட்ட மூன்று பேரும் வங்கியில் பணம் எடுத்துபவர்களை குறி வைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மீட்டார்கள். பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

Categories

Tech |