Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்….. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்….. மாநில முதல்வரின் முக்கிய அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததிலிருந்து அரசு ஊழியர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போன்ற சலுகைகள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லாததால் அதை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருவதோடு, போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் வருகிற அக்டோபர் மாதம் முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு அமைச்சரவையிலும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதோடு அரசு ஊழியர்கள் விதிமுறைகளை பின்பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை இதுவரை அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |