Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இப்படி ஒரு திட்டமா?…. இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3400…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பி எம் கிசான் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் இந்த திட்டங்கள் தொடர்பான அப்டேட்டுகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அவ்வகையில் சமீபத்தில் பிரதான் மந்திரி கியான்வீர் யோஜனா என்ற திட்டம் குறித்த செய்தி ஒன்று வைரலாகியது.

அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு மாதம்தோறும் 3400 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகியதை தொடர்ந்து இளைஞர்கள் பலரும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என நினைத்துள்ளனர்.ஆனால் இப்படிப்பட்ட ஒரு திட்டமே மத்திய அரசு கொண்டு வரவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

PIB Fact check சார்பாக நடத்தப்பட்ட உண்மை சரிபார்ப்பு சோதனையில் மத்திய அரசு சார்பாக இளைஞர்களுக்கு மாத 3400 நிதியுதவி தரக்கூடிய வகையில் எந்த திட்டமும் இல்லை என்றும் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் இப்படி ஒரு போலியான செய்தி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருவதாகவும் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக இணையத்தில் போலி செய்திகள் அதிக அளவு வலம் வந்து கொண்டிருப்பதால் மக்கள் யாரும் இது போன்ற செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |