தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ரஜினி 170 திரைப்படம் குறித்த புதிய தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதாவது ரஜினியின் 170-வது திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, பல வருடங்களுக்கு முன்பாக அம்மா ஜெயலலிதா அவர்கள் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
அதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மணிரத்தினரிடம் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கவா என்று கேட்டேன். ஆனால் மணிரத்தினம் மறுத்துவிட்டார் என்றார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.