Categories
உலக செய்திகள்

அட டேய் சூப்பர்!!…. உள்துறை மந்திரி பதவியை கைப்பற்றிய இந்திய வம்சாவளி பெண்…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!!

இங்கிலாந்தின் உள்துறை மந்திரி பதவியை இந்தியா வம்சாவளி பெண்  கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்து  நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ்  டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில் லிஸ்  டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரித்தி படேல்   தன்னுடைய உள்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாட்டின் உள்துறை மந்திரியாக சூலா  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஆவார். மேலும் இவரின் தாய் உமா தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

கடந்த 1960-ஆம் ஆண்டு உமா இங்கிலாந்துக்கு சென்றார். பின்னர் அங்கு இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் சூலா. இதனையடுத்து சூலா கடந்து 2018- ஆம் ஆண்டு பிரேவர்மென் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புதிய உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு  பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |