Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள்…. தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியீடு…. என்எம்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள்‌ மற்றும் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சிசிடிவி கேமராக்களை பொருத்துவது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை என்எம்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கல்லூரி வளாகத்தில் குறைந்தது 25 சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். அதன்பிறகு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கேமராக்களை பொருத்த வேண்டியது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

இதனையடுத்து முகப்பு பகுதியில் 1 கேமராவும், புறநோயாளிகள் பிரிவில் 5 கேமாராக்களும், அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், விரிவுரைக் கூடங்கள் போன்றவகைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கேமாராக்களை பொருத்த‌ வேண்டும். இந்த கேமாராக்கள் மிகவும் துல்லிய தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதுதொடர்பான‌ அறிவிப்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பே வெளியானது.  ஆனால் பல மருத்துவ கல்லூரிகள் என்எம்சியிடம்‌ பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதன் காரணமாகதான் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.‌ மேலும் சந்தேகங்களை என்எம்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |