மணிரத்னம் இயக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடந்தது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என மணிரத்னத்திடம் வாய்ப்பு கேட்டதாக தெரிவித்து இருக்கிறார்.
அதாவது அவர் கூறியதாவது, இத்திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்க வேண்டும் என மணிரத்னத்திடம் கேட்டேன். ஆனால் மணிரத்தினம் உங்களுடைய ரசிகர்களிடம் என்னால் திட்டு வாங்க முடியாது எனக்கூறி அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார். அத்துடன் பிரபல பத்திரிக்கை ஒன்றில் மறைந்த அமரர் ஜெயலலிதா வாசகர்கள் கேள்விக்கு பதிலளித்துவந்தார். வாசகர் ஒருவர் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது எடுத்தால் வந்தியத் தேவன் கதாபாத்திரத்துக்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என கேட்டிருந்தார்.
அதற்கு ஜெயலலிதா அவர்கள் ஒரேவரியில் ரஜினிகாந்த் என எழுதியிருந்தார்கள். இது சொன்னதும் எனக்கு குஷியாகிடுச்சு. அதற்குபின் தான் நான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். இதனை கேட்ட பிறகு தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகியது. ஆனால் மணிரத்தினம் தன் ரசிகர்களை காரணம் காட்டி சின்ன ரோல் கூட கொடுக்க மறுத்தது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்றார்.