Categories
தேசிய செய்திகள்

“Aadhar உடன் மொபைல் எண் இணைப்பது கட்டாயம்”….. எப்படி செய்வது…. ஈஸியான வழி இதோ…..!!!

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகனின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் அட்டையை பயன்படுத்தி சமீபத்தில் பல மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு முன்பே அறிவுறுத்தி இருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது மற்றும் புதிய இணைப்பு குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி உங்களது ஆதார் கார்டில் மொபைல் எண்ணை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலோ அல்லது ஆதாரில் இருக்கும் தற்போதைய மொபைல் எண்ணுக்குப் பதிலாக நீங்கள் உங்களது வேறு எண்ணை மாற்ற விரும்பினால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று ஆதார் அலுவகலத்தில் இருந்து ஆதார் திருத்தம் / புதுப்பிப்பு படிவத்தைப் பெற்று நிரப்பி, சேவை மையத்தில் பணியாற்றும் நபரிடம் நிரப்பிய படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

பின் ஆதார் திருத்தத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்திட வேண்டும். Update Request Number என்ற ஒரு எண் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைல் எண் ஸ்டேட்டஸ் பற்றித் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் உங்களுக்கு ஆதார் எண்ணுடன் புதிய மொபைல் எண் அப்டேட் செய்யப்படும்.

அதேபோல மொபைல் எண்ணை ஆதாரில் இணைப்பதற்கு ஆதார் மையத்திற்கு சென்று ஆதார் பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது ஆதார்வுடன் இணைக்க வேண்டிய மொபைல் எண்ணை வடிவத்தில் இணைத்து ஆதார் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு உங்கள் விவரங்களை பயோமெட்ரிக் ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தி அங்கீகரிப்பார். இந்த சேவைக்கு கட்டணம் ரூபாய் 50 வசூல் செய்யப்படும்.

Categories

Tech |