Categories
அரசியல் மாநில செய்திகள்

JUSTNOW: கன்னியாகுமரியில் ராகுல் காந்தி ….!

ஒற்றுமை யாத்திரையை தொடங்க தற்போது கன்னியாகுமரி சென்றடைந்து இருக்கிறார் ராகுல் காந்தி.

முன்னதாக நேற்று அவர் தமிழகத்தை வந்தடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி இருந்தார். தற்போது அவர் கன்னியாகுமரி சென்றடைந்து இருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும்,

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் சோடோ யாத்ரா என்ற பெயரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். கன்னியாகுமரியில் இந்த நடை பயணம் தொடங்க இருக்கிறது. 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3500 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அவர் காஷ்மீரை அடைகிறார்.

Categories

Tech |