மிதுனம் ராசி அன்பர்களே, இன்று உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாடாகவே இருக்கும். வரவும், செலவும் சமமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள். இன்று பணவரவை பொருத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. உங்களுடைய செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமதமாகவே விலகிச்செல்வார்கள்.
தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி நல்லபடியாகவே நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டுகளை பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரக்கூடும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெண்மை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,வெண்மை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்