Categories
மாநில செய்திகள்

காவலர் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு….. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழ்நாடு அரசின் குடிமைப் பணிகள் பயிற்சிமையத் தலைவரும், தலைமைச் செயலருமான வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் “போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள சர் தியாகராயர் கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிஆகிய மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத்தேர்வில் இபந்த பயிற்சி மையத்தின் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.

இப்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட இருக்கிறது. இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பப் படிவம் போன்றவை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 14ஆம் தேதி வரை பயிற்சிமையங்களில் நேரடியாக அளிக்கலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு 044 -24621475 மற்றும் 24621909 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |