Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…தைரியத்துடன் செயல்படுவீர்கள்.. பிரச்சனைகள் குறையும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று தைரியத்துடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாளாகவே இருக்கும். சங்கிலித் தொடர் போல வந்த கடன் பிரச்சனை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் மாறும். இன்று வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.

விருந்தினர் வருகை இருக்கும், தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாகவே முடியும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள். மாணவர்கள் விளையாடிவிட்டு பாடத்தை படியுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் . அது மட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |