Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.. எதிர்காலம் பற்றிய முடிவு எடுப்பீர்க்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று  அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைப்பட்டுவந்த காரியங்கள் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சு ஆதாயம் உண்டாகும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாகவே தான் இருக்கும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விளையாட்டை கூடுமானவரை தடை செய்துவிட்டு பாடங்களில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |