இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதற்காக கடன்களுக்கு MCLR வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடன்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதம். அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் அதன் விளைவாக பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி கொண்டே வருகின்றன. அவ்வகையில் கனரா வங்கியும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்ந்துள்ளது.
இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இதன்படி ஒரு வருடத்திற்கான வட்டி விகிதம் 7.65 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வது மட்டுமல்லாமல் மாத இஎம்ஐ கட்டணம் உயரக்கூடும்.இதனால் கடன் வாங்கி திருப்பி செலுத்தி வருவோரும் புதிதாக கடன் வாங்குவோர் என இரு தரப்பினருக்கும் இஎம்ஐ கட்டணம் உயரக்கூடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.