லாவா நிறுவனமானது Service at Home பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் இனி நாடு முழுக்க சுமார் 9 ஆயிரம் அஞ்சல் குறியீட்டு பகுதிகளில் செயல்படுகிறது. மேலும் லாவா நிறுவத்தில் இனிமேல் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த திட்டம் உண்டு என கூறப்படுகிறது. இதற்கு முன் இந்த திட்டமானது லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் குறிப்பிட்ட போனிற்கான வாரண்டி இருக்கும் வரை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை பயன்படுத்த லாவாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், வாடிக்கையாளர் சேவை மையம், கேர் ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மற்றும் ஸ்மார்ட்போன் பெட்டியில் உள்ள QR codeஐ ஸ்கேன் செய்து தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதில் பிரச்சனை தெரிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் அதற்கான தீர்வு வழங்கப்படும். மேலும் சிறிய மென்பொருள் மற்றும் hardware பிரச்சினைகள் வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே சரி செய்து தரப்படும். ஆனால் பெரிய பிரச்சினைகளாக இருந்தால் ஸ்மார்ட்போன் எடுத்துச் செல்லப்பட்டு சரி செய்யப்படும். அதன் பின் அவை வாடிக்கையாளர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக pick up மற்றும் delivery செய்யப்படும். இத்துடன் display மாற்றுவதும் இலவசமாக தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.