Categories
தேசிய செய்திகள்

உங்க கிட்ட கிரெடிட் கார்டு இருக்கா?…. அப்போ இனி இந்த தவறை பண்ணாதீங்க…. இதோ உங்களுக்கான சில டிப்ஸ்….!!!!

தற்போது பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர்.

கிரெடிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை மேற்கொள்வது மக்களுக்கு எளிதான ஒன்றாக உள்ளது.ஆனால் அதில் நாம் செய்யக்கூடிய சிறிய தவறுகளால் நமக்கு கடன் சுமை அதிகரிக்க கூடும்.கிரெடிட் கார்டு மூலமாக கடனாக பெற்ற தொகையை நிறுவையில் வைக்காமல் உரிய கால அவகாசத்திற்குள் செலுத்தி விட வேண்டும். நீங்கள் தாமதமாக பணம் செலுத்தும் போது உங்களின் சிபில் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும். கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுப்பது தவறான ஒன்று.

இது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வது தான் சிறந்தது.காடு மூலம் பணம் பெறும்போது நிறுவனம் உங்களிடம் அதிக வட்டியை வசூலிக்க கூடும்.கிரெடிட் கார்டு வரம்புக்குள் ஷாப்பிங் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.தவணை முறையில் பொருட்கள் வாங்குவது எளிதாக இருக்கிறது என கருதி கடன் சுமையை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். குறிப்பாக கிரெடிட் கார்டை அதிகமாக பயன்படுத்தி கடன் வாங்குவது மிகவும் ஆபத்தானது. 30 சதவீதம் கடன் விகிதம் நல்ல விதமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் அதற்கு மேல் கடன் வாங்குவது சுமையை அதிகரிக்க கூடும். கிரெடிட் கார்டு பயன்பாட்டை மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் வைத்துக் கொள்ளலாம். மேலும் கிரெடிட் கார்டு உங்களுக்கு எப்போது மிக அவசியமாக தேவைப்படுகிறதோ அப்பொழுது மட்டுமே அதற்கு விண்ணப்பித்து வாங்குங்கள். உங்களின் கிரெடிட் கார்டை தேவையில்லாமல் பயன்படுத்துவது சிபில் ஸ்கோரை குறைத்து விடும். கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பே இதில் உள்ள சாதகம் மற்றும் பாதகங்களை தெரிந்து கொண்டு அதனை வாங்குவது மிகவும் நல்லது. இல்லையென்றால் நீங்கள் கடன் சுமைக்கு ஆளாக கூடும்.

Categories

Tech |