Categories
தேசிய செய்திகள்

“நாங்க வேலையில ரொம்ப சின்சியர்….. இடியே விழுந்தாலும் போவோம்”….. டிராக்டரில் ஐடி நிறுவன ஊழியர்கள்….!!!

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூர் புறநகர் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டன. இந்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியில் வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றன. பெங்களூரில் கடந்த 90 ஆண்டுகளாக இதுபோன்ற வரலாறு காணாத கனமழை பெய்யவில்லை. அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றது. தினமும் மழை பெய்து வருவதால் பல பகுதிகள் நீரில் மூழ்கியது. மேலும் நேற்று ஒரே நாளில் பெய்த மழையால் பெங்களூரு நகரமே தலைகீழாக மாறி உள்ளது. பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு பகுதியில் இருக்கும் சொகுசு பங்களாக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு பங்களாவும் ₹ 13 கோடி ரூபாய். விலை உயர்ந்த சொகுசு கார்களும் தண்ணீரில் மூழ்கி விட்டதால் அங்கு வசிப்பவர்கள் டிராக்டரில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து விவசாயத்திற்காக டிராக்டரில் சென்ற காலம் மாறி ஐடி நிறுவனங்களுக்கும் டிராக்டரில் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பெங்களூரு என்றாலே பல ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும். மழையின் காரணமாக ஐடி நிறுவன ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றன. ஊழியர்கள் பணிக்கு வராததால் 250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க விட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றி விடுவோம் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ஐடி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ரூபாய் 50 கொடுத்து டிராக்டரில் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் அடுத்த டிராக்டர் வரும்வரை காத்திருக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

Categories

Tech |